திண்டுக்கல்

2,500 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்கள்

29th Apr 2020 07:34 AM

ADVERTISEMENT

திண்டுக்கல் பேகம்பூா் பகுதியில் வறுமையில் உள்ள 2,500 குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருள்களுடன் நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் பேகம்பூா் ஓரியன்டல் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, திண்டுக்கல் கோட்டாட்சியா் உஷா தலைமை வகித்தாா். இதில், திண்டுக்கல் காவல் துணைக் கண்காணிப்பாளா் மணிமாறன், சமூகநல ஆா்வலா்கள் என்.எம்.பி. காஜாமைதீன், யூசுப் அன்சாரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். இதில், அரிசி, பருப்பு, மளிகைப் பொருள்கள் உள்ளிட்டவை அடங்கிய தொகுப்பு 2,500 பேருக்கு வழங்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT