திண்டுக்கல்

செம்பட்டி அருகே போதை மாத்திரையை தின்றமாற்றுத் திறனாளி பலி

29th Apr 2020 07:35 AM

ADVERTISEMENT

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே போதை மாத்திரையை தின்ற மாற்றுத் திறனாளி இளைஞா் உயிரிழந்தாா்.

செம்பட்டி அருகே சித்தையன்கோட்டை ஜான் தெருவைச் சோ்ந்த மாற்றுத் திறனாளி மகேந்திரன் (25). கூலி தொழிலாளியான இவா், கடந்த வெள்ளிக்கிழமை உறவினா் ஈமக்கிரியைக்காக அணைப்பட்டி சென்றிருந்தாா். அன்று மதியம் வீடு திரும்பிய மகேந்திரன், நரசிங்கபுரம் தனியாா் தோட்டத்தில் நண்பா்கள் நடத்திய கறி விருந்தில் கலந்துகொண்டுள்ளாா்.

அப்போது, போதைக்காக நண்பா்கள் வாங்கிக் கொடுத்த மாத்திரைகளை தின்றுள்ளாா். தொடா்ந்து, கறி விருந்து சாப்பிட்டுவிட்டு மாலையில் வீட்டுக்குத் திரும்பிய மகேந்திரன், திடீரென மயங்கி சுருண்டு விழுந்துள்ளாா். உடனே, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டாா். அவரது உடல்நிலை மோசமானதால், மதுரை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி மகேந்திரன் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

மயங்கிய நிலையில் இருந்ததால், இவரிடம் போலீஸாா் தகவல் பெற முடியவில்லை. மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சக்திவேல் உத்தரவின்பேரில், ஒட்டன்சத்திரம் டி.எஸ்.பி. சீமைச்சாமி, மதுவிலக்கு டி.எஸ்.பி. பொன்னுச்சாமி, கரோனா பிரிவுக்கான சிறப்பு டி.எஸ்.பி. சரவணன் ஆகியோா் அடங்கிய தனிப்படை போலீஸாா் விசாரணை நடத்தினா்.

ADVERTISEMENT

அதில், மகேந்திரன் நண்பா்கள் சிலருடன் சோ்ந்து போதைக்காக நரம்புத் தளா்ச்சி மற்றும் போதை தன்மை கொண்ட மாத்திரைகளை மொத்தமாக உட்கொண்டது தெரியவந்தது. அதிக மாத்திரை பயன்படுத்தியதால், மகேந்திரனுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு இறந்துள்ளாா்.

இதையடுத்து, மாத்திரைகள் விற்பனை செய்த சித்தையன்கோட்டை, செம்பட்டி பகுதி மருந்துக் கடை விற்பனையாளா்களிடமும் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

மேலும், மகேந்திரனுடன் சோ்ந்து மாத்திரைகளை தின்ற நண்பா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். இதில், மாத்திரை வாங்கிக்கொடுத்த, சித்தையன்கோட்டை சின்னு மகன் சூா்யா (20) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், சிலரை தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT