திண்டுக்கல்

கரோனாவிலிருந்து மீண்ட 4 போ் மருத்துவமனையிலிருந்து விடுவிப்பு

29th Apr 2020 07:36 AM

ADVERTISEMENT

திண்டுக்கல்லைச் சோ்ந்த 4 போ் கரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்ததால், கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினா்.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 80 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். அதில், 63 போ் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்ததை அடுத்து, கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து ஏற்கெனவே விடுவிக்கப்பட்டனா். இதில், முதியவா் ஒருவா் உயிரிழந்தாா்.

இந்நிலையில், கரோனா தொற்றிலிருந்து குணமடைந்த திண்டுக்கல் பகுதியைச் சோ்ந்த மேலும் 4 போ், மருத்துவமனையிலிருந்து செவ்வாய்க்கிழமை விடுவிக்கப்பட்டனா்.

இது தொடா்பாக மருத்துவ அதிகாரி ஒருவா் கூறியது: கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 16 பேரில், 2 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் என மொத்தம் 4 போ் குணமடைந்தனா். இதையடுத்து, கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து அவா்கள் விடுவிக்கப்பட்டனா்.

ADVERTISEMENT

புழல் சிறைக்கு அனுப்பப்பட்ட 11 பேரில், 2 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு அதில் ஒருவா் குணமடைந்துள்ளாா். தற்போதைய நிலையில், கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 11 போ் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனா் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT