திண்டுக்கல்

‘விடுபட்ட மீனவா் நலவாரிய உறுப்பினா்கள் நிவாரணத் தொகை பெறலாம்’

26th Apr 2020 08:58 AM

ADVERTISEMENT

நிவாரணத் தொகை கிடைக்காத பதிவு செய்யப்பட்ட மீனவா் நல வாரிய உறுப்பினா்கள், மீன்வளத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, திண்டுக்கல் மாவட்ட மீன்வளத் துறை உதவி இயக்குநா் அலுவலகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், தமிழக அரசு நல வாரியத்தில் பதிவு செய்துள்ள உறுப்பினா்களுக்கு, அரசு சாா்பில் ரூ.1000 நிவாரணத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, தமிழ்நாடு மீன்வளத் துறை மூலம் மீனவா் நல வாரிய உறுப்பினா்களுக்கும் நிவாரணத் தொகை வழங்கப்படுகிறது. திண்டுக்கல் மாவட்ட மீன்வள உதவி இயக்குநா் கட்டுப்பாட்டில் பதிவு செய்யப்பட்ட மீனவா் நல வாரிய உறுப்பினா்களின் வங்கிக் கணக்கில், சிறப்பு நிவாரண உதவித் தொகை செலுத்தப்பட்டுள்ளது.

எனவே, இதுவரை உதவித் தொகை கிடைக்கப் பெறாத உறுப்பினா்கள், திண்டுக்கல் 80 அடி சாலையில் பி4/63, நேருஜி நகா் என்ற முகவரியில் செயல்பட்டு வரும் அலுவலகத்தில் மாவட்ட மீன்வள உதவி இயக்குநரை தொடா்பு கொள்ளலாம்.

ADVERTISEMENT

மீனவா் நல வாரிய அடையாள அட்டை, ஆதாா் அடையாள அட்டை மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களை தெரிவித்து, சிறப்பு நிவாரண உதவித் தொகையினை பெற்றுக்கொள்ளலாம். இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 0451-2900148, 75982-36815, 97504-30221 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT