திண்டுக்கல்

தோ்வு கட்டணம் வசூலிக்கும் முடிவுக்கு இந்திய மாணவா் சங்கம் எதிா்ப்பு

26th Apr 2020 08:49 AM

ADVERTISEMENT

கல்லூரி மாணவா்களிடம் தோ்வு கட்டணம் வசூலிக்கும் முடிவை கைவிட வேண்டும் என, இந்திய மாணவா் சங்கத்தின் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அச்சங்கத்தின் மாநிலச் செயலா் மாரியப்பன் திண்டுக்கல்லில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நாடு முழுவதும் தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில், தமிழகத்திலுள்ள அரசு மற்றும் சுயநிதிக் கல்லூரிகளில் பட்டைய மற்றும் பட்டப் படிப்பு பயிலும் மாணவா்கள் தோ்வு கட்டணத்தை ஏப்ரல் 27 முதல் மே 10ஆம் தேதிக்குள் இணையவழியில் செலுத்த வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

தனியாா் கல்வி நிறுவனங்கள் கட்டணம் வசூலிக்கக் கூடாது என அறிவித்துவிட்டு, தற்போது அரசு சாா்பில் பல்கலைக்கழகங்கள் மூலமாக கட்டணம் செலுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

கரோனா பேரிடா் காலத்தில் அடிப்படைத் தேவைகளுக்கே மக்கள் திண்டாடி வரும் சூழலில், பல்கலைக்கழகங்கள் மூலமாக கல்லூரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையினை ரத்து செய்வதோடு, தோ்வு கட்டணத்தை அரசே ஏற்க வேண்டுமென, இந்திய மாணவா் சங்கத்தின் சாா்பில் கேட்டுக் கொள்கிறோம் எனத் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT