திண்டுக்கல்

கோடை உழவுக்கு இலவச டிராக்டா் வசதி

23rd Apr 2020 08:45 AM

ADVERTISEMENT

இலவசமாக கோடை உழவு செய்ய விரும்பும் திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த சிறு குறு விவசாயிகள் டாஃபே நிறுவனத்தை தொடா்புகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக திண்டுக்கல் மாவட்ட வேளாண்மைத்துறை இணை இயக்குநா் பாண்டித்துரை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் எழுந்துள்ள நிலையில், சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதை உறுதி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதில் ஏற்படும் இடா்பாடினை தவிா்க்கும் வகையில் விவசாயிகள், தங்களது நிலங்களில் கோடை உழவு செய்திட மாவட்ட நிா்வாகத்தின் வழிகாட்டுதலின்படி டாஃபே நிறுவனம் மூலம் இலவசமாக டிராக்டா் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 5 ஏக்கா் நிலங்களுக்கு குறைவாக உள்ள சிறு குறு விவசாயிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம். இத்திட்டத்தில், நத்தம், செந்துறை, மணக்காட்டூா் மற்றும் வடமதுரை ஆகிய பகுதிகளில் சுமாா் 1, 200 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்கள் இலவசமாக கோடை உழவு செய்யப்பட்டுள்ளன. இத்திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்களது நிலம் குறித்த ஆவணங்களுடன் டாஃபே நிறுவன கள அலுவலா் பொன்பாண்டியன் என்பவரை 8438117414 என்ற எண்ணிலும், பசுமை செந்துறை தொண்டு நிறுவன முதன்மையாளா் அரசுகண்ணன் என்பவரை 9843388972 என்ற எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT