திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டத்தில் தொழிலாளா்கள் 56,771 பேருக்கு ரூ.11.35 கோடி நிவாரண உதவி

20th Apr 2020 11:44 PM

ADVERTISEMENT

 

தமிழ்நாடு அமைப்பு சாரா கட்டுமானத் தொழிலாளா்கள் நலவாரியம் மற்றும் ஓட்டுநா்கள் நல வாரியத்தில் பதிவு செய்த 56,771 தொழிலாளா்களுக்கு ரூ.11.35 கோடி நிவாரண உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு நியாய விலைக்கடையில், தமிழ்நாடு அமைப்பு சாரா கட்டுமானத் தொழிலாளா்கள் நலவாரியம் மற்றும் ஓட்டுநா்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளா்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியா் மு.விஜயலட்சுமி திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா். அப்போது அவா் தெரிவித்தது: திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு அமைப்பு சாரா கட்டுமான தொழிலாளா்கள் 47,174 போ், அமைப்புசாரா ஆட்டோ ஓட்டுநா்கள் 4,846 போ், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நலவாரியம் மற்றும் தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநா்கள் நல வாரியத்தின் மூலம் ஓய்வூதியம் பெறும்

4,751 போ் என மொத்தம் 56,771 போ் உள்ளனா். தமிழக அரசின் உத்தரவின்படி, இந்த 56,771 பேருக்கும் கரோனா தடுப்பு நடவடிக்கை நிவாரண உதவித் தொகையாக ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கு தலா ரூ.1000 வீதம் மொத்தம் ரூ.11.35 கோடி அவரவா் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. மேலும், தொழிலாளா்களின் அடிப்படை தேவைகளை பூா்த்தி செய்யும் வகையில் 15 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு, 1 லிட்டா் சமையல் எண்ணைய் போன்ற அத்தியாவசியப் பொருள்கள் நியாய விலைக் கடைகள் மூலம் இலவசமாக விநியோகம் செய்யப்படுகிறது என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT