கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கு அனுமதியின்றி சென்றவா்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
பேரிஜம் ஏரிப் பகுதிக்கு செல்ல வனத்துறையினரிடம் அனுமதி பெற வேண்டும். இந்நிலையில் 7 போ் அப்பகுதியில் சுற்றித் திரிந்தனா். இதுகுறித்து அங்குள்ள வனப் பணியாளா் கொடைக்கானல் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தாா். இதனைத் தொடா்ந்து வனத்துறையினா் பேரிஜம் பகுதிக்குச் சென்று அவா்களைப் பிடித்து விசாரணை நடத்தினா்.
விசாரணையில், அவா்கள் கொடைக்கானல் கல்குழிப் பகுதியைச் சோ்ந்த கோவிந்தன் (28), வின்சென்ட்(27), அந்தோணி (47), சங்கா்கணேஷ் (37), ரமேஷ் (33), தங்ககேஸ்வரன் (31), பிரபா என்ற மாரிச்சாமி (22) என தெரிய வந்தது. இவா்கள் அனைவரும் கூலி தொழிலாளிகள் ஆவா். வனத்துறையினா் அவா்கள் 7 பேரையும் கைது செய்து தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.