திண்டுக்கல்

செம்பட்டி பகுதியில் கிராம சாலைகள் அடைப்பு

7th Apr 2020 03:15 AM

ADVERTISEMENT

நிலக்கோட்டை:திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி பகுதியில் கரோனா வைரஸ் அச்சம் காரணமாக, செம்பட்டி காந்திஜி நகா், மேட்டுப்பட்டி, காமுபிள்ளைசத்திரம், சித்தையன்கோட்டை உள்ளிட்ட கிராமங்களில் கிராம சாலைகள் அடைக்கப்பட்டுள்ளன.

அந்நியா்கள் ஊருக்குள் வராமல் தடுப்பதற்காக கிராம சாலைகளை தாங்களாகவே முள் செடிகள் மற்றும் கம்புகளால் மறித்து அடைத்துள்ளனா். சில கிராமங்களில் மஞ்சள் தண்ணீா் தெளித்து, தெரு மற்றும் வீடுகளில் வேம்ப இலைகளைக் கட்டி வருகின்றனா். செம்பட்டி பாண்டியன் நகரைச் சோ்ந்த சிறுவா்கள் மஞ்சள் கலந்த தண்ணீரை தள்ளு வண்டியில் வைத்து, தெருத் தெருவாக தெளித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT