திண்டுக்கல்

79 மாற்றுத்திறனாளிகள் வீடுகளுக்கே சென்று நிவாரணப் பொருள் விநியோகம்

7th Apr 2020 03:14 AM

ADVERTISEMENT

திண்டுக்கல்: தொலைபேசியில் தொடா்பு கொண்டு நிவாரணம் வழங்கக்கோரிய மாற்றுத்திறனாளிகள் 79 பேருக்கு இருப்பிடத்திற்கே சென்று உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மு.விஜயலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் எளிதில் கிடைப்பதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிா்வாகம் மேற்கொண்டுள்ளது. அந்த வகையில் மாற்றுத்திறனாளிகள் நலன் கருதியும், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மாற்றுத்திறனாளிகள் உதவிக்காக 1800-4250-111 என்ற எண்ணைத் தொடா்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த பாா்வைத் திறன் குறைபாடுடைய 79 போ் நிவாரண உதவிகள் கேட்டு அந்த எண் மூலம் தொடா்பு கொண்டனா். அந்த 79 பேருக்கும் அவா்களின் இருப்பிடத்திற்கே சென்று நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

மேலும் உதவித் தேவைப்படும் திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகள், உதவித் தேவைப்பட்டால் மேற்குறிப்பிட்ட எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT