திண்டுக்கல்

27 கிராம ஊராட்சிகளுக்கு திமுக சாா்பில் ரூ.5 லட்சம் முகக்கவசம், கிருமி நாசினி விநியோகம்

7th Apr 2020 03:11 AM

ADVERTISEMENT

நிலக்கோட்டை: திண்டுக்கல் மாவட்டத்தில் செம்பட்டி உள்ளிட்ட 27 ஊராட்சிகளைச் சோ்ந்தவா்களுக்கு திங்கள்கிழமை திமுக சாா்பில் ரூ. 5 லட்சம் மதிப்பிலான முகக்கவசம், கைகழவும் திரவம், சோப்பு மற்றும் கிருமிநாசினி வழங்கப்பட்டது.

செம்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆத்தூா் ஒன்றியக்குழுத் தலைவா் மகேஸ்வரி முருகேசன் தலைமை வகித்தாா். துணைத்தலைவா் ஹேமலதா மணிகண்டன், ஒன்றிய திமுக செயலா்கள் (மேற்கு) முருகேசன், (கிழக்கு) ராமன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் மணலூா் மணிகண்டன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னாள் அமைச்சரும், ஆத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி திமுக உறுப்பினருமான ஐ.பெரியசாமி கலந்துகொண்டு, 22 கிராம ஊராட்சிகளில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு முகக்கவசம் கிருமி நாசினி மற்றும் கைகழுவும் திரவம் உள்ளிட்ட பொருள்களை வழங்கினாா். அவா் பேசுகையில், ஆத்தூா் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்ற தலைவா்கள் அனைத்து கிராமங்களிலும் தூய்மை பணிகளை சிறப்பாக செய்து கிராம மக்களின் நலன் காக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தாா். நிகழ்ச்சியில், ஆத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சுப்பிரமணி, சீத்தாராமன், மாவட்ட திமுக துணைச் செயலா்கள் நாகராஜன், தண்டபாணி, மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவா் பாஸ்கரன், ஒன்றிய குழு உறுப்பினா் காணிக்கைராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT