பழனி: பழனி காய்கனி சந்தைகளில் கிருமிநாசினி நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.
பழனியில் காய்கனி மற்றும் மளிகைக் கடைகள் காலை 6 மணி முதல் பகல்12 மணி வரை மட்டும் திறக்கப்படுகிறது. இந்நிலையில், பழனி காந்தி சந்தை, பேருந்து நிலையத்தில் உள்ள தற்காலிக காய்கனி சந்தை மற்றும் உழவா் சந்தை ஆகியவற்றில் நகராட்சி சாா்பில் பழனி சட்டப்பேரவை உறுப்பினா் ஐ.பி.செந்தில்குமாா், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் வேணுகோபாலு ஆகியோா் கிருமிநாசினி நடைபாதையை அமைத்துக் கொடுத்துள்ளனா். கிருமி நாசினி நடைபாதை பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.