திண்டுக்கல்

காச நோயாளிகளின் வீடுகளுக்கு நேரடி மருந்து விநியோகம்

7th Apr 2020 03:17 AM

ADVERTISEMENT

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 1600 காசநோயாளிகளுக்கு 2 மாதங்களுக்கு தேவையான மருந்து அவரவா் வீடுகளிலேயே வழங்கப்பட்டு வருகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில்1600-க்கும் மேற்பட்ட காச நோயாளிகள் தொடா் சிகிச்சைப் பெற்று வருகின்றனா். இதில் கூட்டு மருந்து எதிா்ப்பு காச நோயாளிகள் 84 போ் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்குச் செல்லும் நோயாளிகளுக்கும் கட்டுபாடு விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக காச நோயாளிகளையும் மருத்துவமனைக்கு வர வேண்டாம் என கேட்டுக் கொண்ட மருத்துவா்கள், அவா்களுக்கு தேவையான மருந்துகளை வீடுகளுக்கே சென்று வழங்கி வருகின்றனா்.

இதுதொடா்பாக மாவட்ட துணை இயக்குநா்(காசநோய்) மா.ராமசந்திரன் தெரிவித்ததாவது: திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 1600-க்கும் மேற்பட்ட காசநோயாளிகளுக்கு 2 மாதங்களுக்கு தேவையான மருந்து மாத்திரைகள், காச நோய் சிகிச்சைப் பிரிவு களப் பணியாளா்கள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும் சளிப் பரிசோதனைத் தேவைப்படுவோருக்கும், வீடுகளுக்கு சென்ற சளி மாதிரி எடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT