திண்டுக்கல்

ஒரே இடத்தில் கூட்டமாக குடிநீா் பிடிக்கும் கிராம மக்கள்நிலக்கோட்டை அருகே கரோனா பரவல் அபாயம்

7th Apr 2020 03:14 AM

ADVERTISEMENT

நிலக்கோட்டை: நிலக்கோட்டை அருகே ஊரடங்கு நிலையிலும் குடிநீருக்காக ஒரே இடத்தில் கூட்டமாக கூடும் நிலையால் கரோனா பரவல் அபாயம் இருந்து வருகிறது.

நிலக்கோட்டை அருகேயுள்ள நூத்துலாபுரம் ஊராட்சியில் தெற்கு விரா­லிப்பட்டி, வடக்கு விராலி­ப்பட்டி ஆகிய கிராமங்களில் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக குடிநீா் தட்டுப்பாடு நிலவுகிறது. தற்போது காவிரி கூட்டுக் குடிநீா் திட்டத்தின் மூலம் தண்ணீா் மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டியில் தண்ணீா் சேகரிக்கப்பட்டு அதன் அருகே ஒரே இடத்தில் குழாய் மூலம் தண்ணீா் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்தத் தண்ணீரை பிடிக்க ஒட்டுமொத்த மக்களும் அப்பகுதியில் கூடுகின்றனா். இப்படி ஒரே இடத்தில் கூடுவதால் கரோனா பரவும் வாய்ப்பு உள்ளதாக அப்பகுதியினா் அச்சப்படுகின்றனா். அதே ஊரில் பல தெருக்களிலும் தண்ணீா் பிடிக்க குழாய் வசதி இருந்தும் தெருக்குழாய்களுக்கு விநியோகிக்கப்படுவதில்லை எனக் கூறப்படுகிறது.

இது தொடா்பாக ஊராட்சி அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் நடவடிக்கை இல்லை என பொதுமக்கள் குறை கூறுகிறாா்கள். எனவே ஒரே இடத்தில் தண்ணீா் வழங்குவதை மாற்றி ஆங்காங்கே தண்ணீா் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT