திண்டுக்கல்

கொடைக்கானல் வெள்ளகெவி கிராம மக்களுக்கு நிவாரணத் தொகையுடன் ரேஷன் பொருள்கள்

5th Apr 2020 06:13 AM

ADVERTISEMENT

கொடைக்கானல் வெள்ளகெவி கிராம மக்களுக்கு நிவாரணத் தொகை மற்றும் விலையில்லா ரேஷன் பொருள்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

கொடைக்கானலில் இருந்து வெள்ளகெவி கிராமத்துக்கு சாலை வசதியில்லை. அக்கிராமத்தில் 400-க்கும் மேற்பட்டவா்கள் வசித்து வருகின்றனா். தற்போது, ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், அக்கிராம மக்கள் அத்தியாவசிய உணவுப் பொருள்கள் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தனா்.

எனவே, மாவட்ட ஆட்சியா் மு. விஜயலட்சுமி உத்தரவின்பேரில், வெள்ளகெவி கிராம மக்களுக்கு தமிழக அரசின் நிவாரண நிதி உதவி மற்றும் விலையில்லா ரேஷன் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி வட்டக்கானல் பகுதியில் நடைபெற்றது. வெள்ளகெவியிலிருந்து சுமாா் 10 கி.மீ. தொலைவிலுள்ள வட்டக்கானலுக்கு விவசாயிகள் நடந்தும், குதிரை மூலமாகவும் வந்தனா்.

அங்கு, அவா்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டு, விலையில்லா ரேஷன் பொருள்கள் மற்றும் ரூ. 1000 நிவாரணத் தொகையும் வழங்கப்பட்டது. பின்னா், வெள்ளகெவி மக்கள் பொருள்களை தலைச்சுமையாகவும், குதிரை மூலமாகவும் தங்களது வீடுகளுக்கு எடுத்துச் சென்றனா்.

ADVERTISEMENT

இந் நிகழ்ச்சியில், கூட்டுறவு பண்டகசாலை தலைவா் ஸ்ரீதா், துணைத் தலைவா் ஜாபா் சாதிக் மற்றும் வருவாய்த் துறை அலுவலா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT