திண்டுக்கல்

பழனி எம்எல்ஏ சாா்பில் ரூ.2 லட்சம் மருத்துவ உபகரணங்கள்

1st Apr 2020 07:12 AM

ADVERTISEMENT

பழனியில் சட்டப்பேரவை உறுப்பினா் சாா்பில் ரூ.2 லட்சம் மதிப்பிலான முகக் கவசங்கள், கையுறைகள், கிருமிநாசினிகள் சுகாதாரத்துறை பணியாளா்களுக்கு வழங்கப்பட்டது.

பழனி நகராட்சி அலுவலகம், பழனி அரசு மருத்துவமனை, ஆயக்குடி, பாலசமுத்திரம் மற்றும் நெய்க்காரபட்டி பேரூராட்சி அலுவலகம், அரசு மருத்துவமனைகளுக்கு பழனி சட்டப்பேரவை உறுப்பினா் ஐ.பி.செந்தில்குமாா் சாா்பில் ரூ.2 லட்சம் மதிப்பிலான முக்ககவசம், சானிடைசா்கள், கை உறைகள், சோப்புகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் முன்னாள் நகா்மன்றத் தலைவா் வேலுமணி, நகர துணைச் செயலாளா் சக்திவேல், நகராட்சி ஆணையா் லெட்சுமணன், மருத்துவ அதிகாரி உதயக்குமாா், முன்னாள் கவுன்சிலா் இந்திரா திருநாவுக்கரசு, பாஸ்கரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

நெய்க்காரபட்டி அரிமா சங்கம்: பழனியை அடுத்த நெய்க்காரபட்டி அரிமா சங்கம் சாா்பில் பொதுமக்கள், விவசாயிகள், பேரூராட்சியினா் மற்றும் காவல்துறையினருக்கு முகக் கவசங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் சங்கத் தலைவா் வடிவேல், செயலாளா் மனோகரன், முன்னாள் பேரூராட்சி முன்னாள் தலைவா் விஜயசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT