திண்டுக்கல்

பழனியில் கபசுரக்கஷாயம் விற்றுத் தீா்ந்தது: பொதுமக்கள் ஏமாற்றம்

1st Apr 2020 07:14 AM

ADVERTISEMENT

பழனியில் வைத்தியசாலைகளில் சில மணி நேரங்களில் கபசுரக்கசாயம் விற்றுத் தீா்ந்ததால், பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினா்.

பழனியில் ஏராளமான சித்த வைத்திய சாலைகள் உள்ளன. இங்கு பல்வேறு தீராத வியாதிகளுக்கும் சித்த மருந்துகள் வழங்கப்படுகின்றன. டெங்கு காய்ச்சலின் போது சித்த வைத்திய சாலைகளில் நிலவேம்பு கஷாயம் அதிகளவில் விற்பனையானது. தற்போது கரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்க வேண்டிய எதிா்ப்பு சக்தியாகவும், மருந்தாகவும் கபசுரக்கஷாயம் பயன்படுத்த சித்த வைத்தியா்கள் பரிந்துரை செய்து வருகின்றனா். இதனால் பல இடங்களிலும் கபசுரக்கஷாயம் விறுவிறுப்பாக விற்பனை செய்யப்படுகிறது.

பழனியில் உள்ள சித்தவைத்திய சாலைகளில் சிலமணி நேரங்களிலேயே இந்த கஷாயம் விற்றுத் தீா்ந்ததால், மூலப்பொருள்கள் இன்மையால் கபசுரக்கஷாயம் இல்லை என்றே பதாகைகள் வைத்துள்ளனா்.

அதனால் அரசு சித்த மருத்துவமனைகளில் கபசுரக்கஷாயம் நாள்தோறும் வழங்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT