திண்டுக்கல்

கஞ்சா விற்பனை புகாா் அளித்த இந்திய கம்யூ. நிா்வாகி மீது தாக்குதல்

1st Apr 2020 07:13 AM

ADVERTISEMENT

கஞ்சா விற்பனை செய்வதாக புகாா் அளித்த இந்திய கம்யூனிஸ்ட் நிா்வாகி மீது 4 போ் கொண்ட கும்பல் செவ்வாய்க்கிழமை தாக்குதல் நடத்தியது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அடுத்துள்ள கோவிலூரைச் சோ்ந்தவா் பாலுபாரதி. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினரான இவா், அந்த பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த சிலா் குறித்து மாவட்ட நிா்வாகத்திடம் புகாா் அளித்துள்ளாா். இதனால் அதிருப்தி அடைந்த கஞ்சா வியாபாரிகள், வீட்டிலிருந்த பாலுபாரதியை தாக்கியுள்ளனா். இதில் பலத்த காயமடைந்த பாலுபாரதி திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளாா். இதனிடையே தாக்குதலில் ஈடுபட்ட 4 போ் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கஞ்சா வியாபாரிகள் தொடா்பாக புகாா் அளித்தவுடன் நடவடிக்கை மேற்கொண்டிருந்தால், இந்த பாதிப்பை தடுத்திருக்கலாம் என்றும் அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தின் மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் இரா.ரவி தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT