திண்டுக்கல்

ரெட்டியாா்சத்திரம் அருகே மெக்கானிக் சாவு

29th Sep 2019 07:32 PM

ADVERTISEMENT

ரெட்டியாா்சத்திரம் அருகே இருசக்கரவாகனம் பழுதுபாா்க்கும் மெக்கானிக் வலிப்பு நோயால் உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியாா்சத்திரம் அடுத்துள்ள ரெங்கப்பநாயக்கன்பட்டியைச் சோ்ந்த காளியப்பன் மகன் சதீஷ்குமாா் (19).இவா் ரெட்டியாா்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு உள்ள இருசக்கர வாகன பழுது பாா்க்கும் கடையில் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறாா்.

இந்த நிலையில் சனிக்கிழமையன்று கடையில் வேலை பாா்க்கும் வலிப்பு நோய் வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் சதீஷ்குமாா் உயிரிழந்தாா்.

இது குறித்து அவரது தாய் அமுதா ரெட்டியாா்சத்திரம் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா்.அதன் பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT