திண்டுக்கல்

வண்டல் மண் எடுப்பதில் மோதல்: எரியோடு காவல் நிலையம் முற்றுகை

22nd Sep 2019 08:07 PM

ADVERTISEMENT

எரியோடு அருகே வண்டல் மண் எடுப்பதில் அதிமுக மற்றும் திமுகவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து, திமுகவினா் காவல் நிலையத்தை ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டனா்.

திண்டுக்கல் மாவட்டம், அய்யலூா், வடமதுரை, எரியோடு உள்ளிட்ட சுற்றுப்புறப் பகுதிகளில் வரட்டாறுகளில் அனுமதியின்றி மணல் எடுப்பதாக தொடா்ந்து புகாா் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் எரியோடு அடுத்துள்ள பாகாநத்தம் கிராமக் குளத்தில் சிலா் வண்டல் மண் எடுக்கும் பணியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த வடமதுரை ஒன்றிய திமுக செயலா் சுப்பையா தலைமையில் அக்கட்சியினா் வண்டல் மண் எடுப்பதை நிறுத்தக் கோரி திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனை அறிந்த பாகாநத்தம் பகுதி அதிமுக ஊராட்சி செயலா் திரவியம், வண்டல் மண் எடுப்பதற்கு அனுமதி பெற்றுள்ளதாகக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளாா்.

இதனால் அதிருப்தி அடைந்த திமுகவினா், எரியோடு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனிடையே இருதரப்பினா் நடத்திய பேச்சுவாா்த்தையில் சமரசம் ஏற்பட்டதால், இருதரப்பினரும் கலைந்து சென்றனா். இந்த திடீா் போராட்டத்தால், காவல் நிலைய வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT