திண்டுக்கல்

கல்லூரியில் சுயபாதுகாப்பு கருத்தரங்கம்

22nd Sep 2019 12:39 AM

ADVERTISEMENT


பழனி அருள்மிகு பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் இணைய குற்றம் மற்றும் சுயபாதுகாப்பு குறித்த கருத்தரங்கம் கல்லூரி கருத்தரங்க கூடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் கந்தசாமி தலைமை வகித்தார்.    திண்டுக்கல் மாவட்ட சிறப்பு புலனாய்வுத்துறை காவல் ஆய்வாளர் முத்துலட்சுமி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, இன்றைய சமுதாயத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றம் குறித்து விழிப்புணர்வு மற்றும் தற்காப்பு குறித்து பயிற்சி வழங்கினார்.  அப்போது, செல்லிடப்பேசியால் பெண்களுக்கு ஏற்படும் இடையூறுகள் குறித்து அவர் விளக்கிப் பேசினார். முன்னதாக மேலாளர் ராமாத்தாள் வரவேற்றார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT