வத்தலகுண்டு காவல் நிலையம் முன்பு திருடப்பட்டு மீட்கப்பட்ட வாகனங்களை போலீஸார் நிறுத்தி வைத்துள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
வத்தலகுண்டு காவல் நிலைய வளாகத்தில் இருபுறமும் விபத்து மற்றும் திருட்டில் சிக்கிய மோட்டார் சைக்கிள்கள், டிராக்டர், கார் போன்றவை ஏராளமாக நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் உள்ளே திருட்டு மற்றும் விபத்தில் சிக்கிய வாகனங்களை நிறுத்த இடமில்லாததால் காவல் நிலையத்திற்கு வெளியே நிரந்தரமாக நிறுத்தியுள்ளனர். இதனால் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதன்காரணமாக பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே காவல் நிலைய வளாகத்திற்குள் பாழடைந்து பயனற்று கிடக்கும் பழைய காவல் நிலையத்தை இடித்து அகற்றிவிட்டு அந்த இடத்தில் காவல் நிலையம் முன்புறம் நிறுத்தியுள்ள வாகனங்களை நிறுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.