திண்டுக்கல்

ரயில்வேக்கு சொந்தமான மரங்களை வெட்டிய 4 பேர் கைது

17th Sep 2019 07:12 AM

ADVERTISEMENT

ரயில்வேக்கு சொந்தமான இடத்தில் மரங்களை வெட்டிய 4 பேரை கைது செய்த ரயில்வே போலீஸார் மரம் ஏற்றி வந்த வேனையும் பறிமுதல் செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் ரயில் நிலையம் அருகே பாலப்பம்பட்டி பிரிவு பகுதியில் ரயில்வேக்கு சொந்தமான இடங்கள் பல ஏக்கரில் உள்ளன.  இந்த இடங்களில் அடர்ந்த வனம் போல மரங்கள் உள்ளன.  இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இந்த இடத்தில் இருந்த வேம்பு உள்ளிட்ட 14 பெரிய மரங்களையும் 26 சிறிய மரங்களையும் வெட்டிய சிலர் மினிவேனில் ஏற்றிக் கொண்டு செல்ல முயன்றுள்ளனர்.  தகவலறிந்த பழனி ரயில்வே போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று வேனை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ரயில்வே மேஸ்திரி சந்திரசேகர் (43), மடத்துக்குளத்தை சேர்ந்த செல்வராஜ் (50), கருப்புச்சாமி (39), சிவக்குமார் (31) உள்ளிட்டோர் மரக்கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது. 
இதையடுத்து 4 பேரையும் கைது செய்த ரயில்வே போலீஸார் பழனி கிளைச்சிறையில் அடைத்ததோடு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT