திண்டுக்கல்

சின்னக்குளத்தில் ரூ.7 கோடியில் பூங்கா அமைக்கும் பணி தொடக்கம்

17th Sep 2019 07:09 AM

ADVERTISEMENT

ஒட்டன்சத்திரம் நகராட்சி சின்னக்குளத்தில் ரூ.7 கோடி மதிப்பில் பூங்காஅமைக்கப்படுகிறது. அந்த பணியை நகராட்சி ஆணையர் பா.தேவிகா திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.
ஒட்டன்சத்திம் நகராட்சிக்கு சொந்தமான சின்னக்குளம் தாராபுரம் சாலையை ஒட்டி சத்யா நகருக்கு எதிரே அமைத்துள்ளது. சுமார் 29 ஏக்கர் பரப்பளவு கொண்ட இக்குளத்தில் நகர் பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் வந்து, தேங்கி நிற்பதால் சுகாதாரக்கேடு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் குளத்தை தூர்வாரி, கழிவு நீரை வெளியேற்றி விட்டு, அப்பகுதியில் அனைத்து தரப்பினரும் பயன்படும் வகையில் பொழுது போக்கு பூங்கா அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் நகராட்சிக்கு கோரிக்கை விடுத்தனர். 
அதன் பேரில் தமிழ்நாடு ஒருங்கிணைந்த நகர்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.7 கோடி செலவில் குளம் தூர்வாரப்பட்டு, அதில் நடைமேடையுடன் கூடிய பூங்கா மற்றும் சிறுவர்கள் விளையாடும் பூங்கா, குடிநீர் மற்றும் சாலை வசதி, மின்விளக்குகள் பொருத்தப்படுகிறது. அதற்கான பூமிபூஜை சின்னக்குளத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில்  நகராட்சி ஆணையர் பா.தேவிகா பணியை தொடக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நகராட்சி பொறியாளர் முகமது சாகுல் ஹமீது, நகர அமைப்பு ஆய்வாளர் ரவிச்சந்திரன், சுகாதார ஆய்வாளர் வீரபாகு, இளநிலை உதவியாளர் ஈஸ்வரன், அரசு ஒப்பந்ததாரர் பாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT