மதுரை சர்க்கரை நோய் பாத சிகிச்சை மையத்தின் திண்டுக்கல் கிளை திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
திண்டுக்கல் நேருஜிநகர் பூங்கா அருகில் அமைந்துள்ள இந்த மருத்துவமனையை எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் ஆர்.முரளிதரன் திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு சர்க்கரை நோய் பாத சிகிச்சை சிறப்பு மருத்துவரும், மதுரை சர்க்கரை நோய் பாத சிகிச்சை மையத்தின் உரிமையாளருமான ஜி.சரவணக்குமார் தலைமை வகித்தார். மனநல ஆலோசகர் எஸ்.சிவசங்கரி முன்னிலை வகித்தார்.
விழாவில் மருத்துவர் ஜி.சரவணக்குமார் கூறுகையில், எங்கள் மையத்தின் சார்பில் சர்க்கரை நோயாளிகளின் ஆறாத புண் மற்றும் கால் ஆணிக்கான பாத சிகிச்சைக்கு மதுரை, ராமநாதபுரம், தேனி ஆகிய இடங்களில் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தற்போது 4 ஆவது கிளை திண்டுக்கல்லில் தொடங்கப்பட்டுள்ளது என்றார். விழாவில் மருத்துவர்கள் டி.மருதுபாண்டியன், வி.திருலோகச்சந்திரன், ஜெ.எஸ்.சி.கேகர், சி.முரளிதரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.