திண்டுக்கல்

வத்தலகுண்டு அருகே விபத்து: வட்டார வளர்ச்சி அலுவலர்  உள்பட 2 பேர் காயம்

10th Sep 2019 09:06 AM

ADVERTISEMENT

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே லாரி மீது ஜீப் மோதியதில், நிலக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் உட்பட 2 பேர் திங்கள்கிழமை காயமடைந்தனர்.
நிலக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) செல்வராஜ் (57), துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் புவனேஷ்வரி, பழனிச்சாமி ஆகியோர் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற, அதிகாரிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர், செம்பட்டி வழியாக வத்தலக்குண்டு நோக்கி ஜீப்பில் சென்றனர். ஜீப்பை  கிருஷ்ணமூர்த்தி ஓட்டிச்சென்றார். வத்தலக்குண்டு சாலை, கே.சிங்காரக்கோட்டையை அடுத்த செல்லம்பட்டி என்ற இடத்தில் சென்றபோது, முன்னால் நின்றுகொண்டிருந்த லாரி மீது ஜீப் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வராஜ், மற்றும் ஓட்டுநர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் காயம் அடைந்து வத்தலக்குண்டு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்ற இருவரும் காயமின்றி தப்பினர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT