திண்டுக்கல்

பழனி மகளிர் கல்லூரியில் பன்னாட்டு கருத்தரங்கம்

7th Sep 2019 02:36 AM

ADVERTISEMENT

பழனி அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலைக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை வேதியியல் துறை சார்பில் வேதியியல் துறையில் புதிய தொழில் நுட்பங்கள் என்ற தலைப்பில் ஒருநாள் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் புவனேஸ்வரி தலைமை வகித்தார்.  காலை மற்றும் மாலை என இரு அமர்வாக நடைபெற்ற கருத்தரங்கில் அமெரிக்க ஹல் பல்கலைக்கழக பேராசிரியர் செல்லமுத்து அன்பு, பாண்டிச்சேரி பல்கலைக்கழக பேராசிரியர் சிவசங்கர், கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி பேராசிரியர் சாமிநாதன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று நவீன அறிவியலில் வேதியியலின் நவீன தொழில்நுட்பத்தால் ஏற்படும் நன்மைகள், தீமைகள் குறித்து உரை நிகழ்த்தினர். 
விழா நிறைவில் உதவிப் பேராசிரியர் அனிதா, ஆய்வுக்கட்டுரைகள் நூலாக தொகுத்து வெளியிடப்பட்டது. முன்னதாக துறைத் தலைவர் முத்துலட்சுமி  வரவேற்றார்.
கருத்தரங்கில் திண்டுக்கல், தேனி, கோவை, திருப்பூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பல்கலைக் கழகம், கல்லூரிகளில் இருந்து 350-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
முன்னதாக மாணவிகளுக்கு தீவிபத்து குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பழனி தீயணைப்பு நிலைய அலுவலர் கமலக்கண்ணன் 
தலைமையில் ஏராளமான தீயணைப்புப்படை வீரர்கள் தீத்தடுப்பு மற்றும் தீ விபத்து குறித்து செயல்முறை விளக்கம் செய்து காட்டினர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT