திண்டுக்கல்

பல்கலை. அளவிலான கோ-கோ போட்டி: பெரியகுளம் மகளிர் கல்லூரி அணி வெற்றி

7th Sep 2019 02:36 AM

ADVERTISEMENT

அன்னை தெரசா மகளிர் பல்கலை. அளவிலான கோ-கோ போட்டியில்  பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம்  அணி வெற்றி பெற்றது.
 கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக்கத்திற்கு உள்பட்ட 12 மகளிர் கல்லூரிகளுக்கான கோ-கோ விளையாட்டுப் போட்டி திண்டுக்கல் எம்விஎம் அரசு மகளிர் கல்லூரியில் வியாழக்கிழமை தொடங்கின. போட்டிகளை கல்லூரி முதல்வர் செ.லதா பூர்ணம் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அன்னை தெரசா மகளிர் பல்கலை. உடல் கல்வித்துறை ஒருங்கிணைப்பாளர் அ.ராஜம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.   "நாக் அவுட்' முறையில் நடைபெற்ற இப்போட்டியில், பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரி மற்றும் கம்பம் ஆதிசுஞ்சுனகிரி கல்லூரி அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றன. வெள்ளிக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில், பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரிஅணி வெற்றி பெற்றது. 
பரிசளிப்பு நிகழ்ச்சிக்கு அன்னை தெரசா மகளிர் பல்கலை. உடற் கல்வித்துறை ஒருங்கிணைப்பாளர் அ.ராஜம் தலைமை வகித்தார். முதல் மற்றும்  2ஆம் இடம் பிடித்த அணிகளுக்கு பதக்கம் வழங்கப்பட்டது. இப்போட்டிக்கான ஏற்பாடுகளை எம்விஎம் கல்லூரி பேராசிரியர்கள் எஸ்.ராஜாத்தி, ஈத்தல் பாலின், விரோனிகா ஆகியோர் செய்திருந்தனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT