திண்டுக்கல்

திண்டுக்கல்லில் 1 டன் நெகிழிப் பை பறிமுதல்: கிட்டங்கி உரிமையாளருக்கு ரூ.25ஆயிரம் அபராதம்

7th Sep 2019 02:37 AM

ADVERTISEMENT

திண்டுக்கல்லில் 1 டன் நெகிழிப் பைகளை பறிமுதல் செய்த மாநகராட்சி அலுவலர்கள், பதுக்கி வைத்திருந்த கிட்டங்கி உரிமையாளருக்கு ரூ.25ஆயிரம் அபராதம் விதிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
 திண்டுக்கல் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் பாலமுருகன், சுரேஷ்குமார் ஆகியோர் தலைமையில், டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கைக்காக வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. திண்டுக்கல்- பழனி சாலையிலுள்ள முருகபவனம் பகுதியில் நடைபெற்ற இந்த ஆய்வின்போது, அங்குள்ள பழைய டயர் கடைகளில், அடுக்கி வைக்கப்பட்டிருந்த டயர்களில் தண்ணீர் தேங்கியிருப்பது கண்டறியப்பட்டது. இதனை அடுத்து அந்த கடைகளின்  உரிமையாளர்களுக்கு ரூ.5ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. 
மேலும், 300 கிலோ எடை கொண்ட டயர்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அதன் தொடர்ச்சியாக, அந்த கடையின் பின்புறமுள்ள தனியார் கிட்டங்கியிலும் சுகாதார ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அங்கு தடை செய்யப்பட்ட 1 டன் நெகிழிப் பைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. 15 மூட்டைகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த  நெகிழிப் பைகளை சுகாதாரத்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் கிட்டங்கி உரிமையாளர் குறித்து  விசாரித்து ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக சுகாதார ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT