திண்டுக்கல்

கொடைக்கானலில் விநாயகர் சிலை ஊர்வலம்

7th Sep 2019 02:37 AM

ADVERTISEMENT

கொடைக்கானலில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஊர்வலத்தை இலங்கை தமிழர் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நாயுடுபுரம் பகுதியிலிருந்து ஊர்வலம் தொடங்கி ஏரிச்சாலை, செவண்ரோடு, அண்ணாசாலை, கே.சி.எஸ்.திடல், மூஞ்சிக்கல், ஆனந்தகிரி மாரியம்மன் கோயில், லாஸ்காட் சாலை வழியாகச் சென்று அரசுமேல்நிலைப் பள்ளி அருகே உள்ள நீரோடையில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் இந்து மக்கள் கட்சியின் நகரச் செயலர் கார்த்திக், மாநில இளைஞரணிச் செயலர் குமரேசன், அதிமுக நகரச் செயலர் ஸ்ரீதர், திமுக நகரச் செயலர் முகமது இப்ராஹிம், பில்டர் அசோஷியன்ஸ் சங்கத்தைச் சேர்ந்தவர்கள்,  பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் இந்து அமைப்பினர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT