திண்டுக்கல்

ஆசிரியர் தின விழாவில் புதிய கல்விக் கொள்கை குறித்து விவாதம்

7th Sep 2019 02:37 AM

ADVERTISEMENT

ஆசிரியர் தின விழாவையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில், புதிய கல்விக் கொள்கை குறித்து விவாதிக்கப்பட்டது.
 திண்டுக்கல் ஸ்ரீ ரமணாஸ் ஏபிசி பாலிடெக்னிக் கல்லூரியில் ஆசிரியர் தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் மணிவண்ணன் தலைமை வகித்தார். 
சிறப்பு அழைப்பாளராக பேராசிரியர் பொன்ராஜ் கலந்து கொண்டு பேசியது: ஆசிரியர்கள் எப்போதுமே மாணவர்களாகவே இருக்க வேண்டும். கற்றுக் கொண்டே கற்பிப்பவர்தான் தலை சிறந்த ஆசிரியராக இருக்க முடியும். பலதரப்பட்ட மாணவர்கள் வகுப்பறையில் இருந்தாலும், மாணவர்களின் சமூக, கல்வி பின்னணியை கருத்தில் கொண்டு கற்பித்தல் பணியை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்றார். 
அதனைத் தொடர்ந்து, ஆசிரியர்களுக்கிடையே தேசிய புதிய கல்விக் கொள்கை வரைவு - 2019 குறித்த விவாதம் நடைபெற்றது. அந்த வரைவில் பரிந்துரைக்கப்பட்டுள்ள உயர்கல்வித்துறை மாற்றங்கள், குறிப்பாக செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பப் பாடங்களின் அவசியம் மற்றும் பட்டயப் படிப்பின் போது மேற்கொள்ள வேண்டிய உள்ளுறைப் பயிற்சிகள் மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. சர்வதேச சவால்களை சந்திக்கவும், தொழில்துறை எதிர்பார்ப்புகளை கல்வி நிறுவனங்கள் பூர்த்தி செய்யும் வகையில் கற்றல் சூழலை மாற்றியமைப்பதற்கான தேவை குறித்தும் வலியுறுத்தப்பட்டது. இந்த விவாதங்களை, கல்லூரி முதல்வர் மணிவண்ணன் நெறிப்படுத்தினார். 
 நிகழ்ச்சியில் ஆங்கிலத்துறை விரிவுரையாளர் மரியசித்ரா, கல்லூரி நிர்வாக அலுவலர் திருப்பதி, இயந்திரவியல் துறை விரிவுரையாளர் சதீஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT