திண்டுக்கல்

4 வழிச்சாலையில் தீப்பற்றி எரிந்தது கார்

4th Sep 2019 07:23 AM

ADVERTISEMENT

மதுரை மாவட்டம், மேலூர் அடுத்துள்ள புதுதாமரைப்பட்டி பகுதியைச் சேர்ந்த விஜயகுமார், தனது நண்பர்கள் 4 பேருடன், கரூர் மாவட்டம் மஞ்சுவிழி கிராமத்தில் நடைபெற்ற கோயில் திருவிழாவில் பங்கேற்பதற்காக காரில் சென்றுள்ளார். வழிபாடு முடிந்த பின், செவ்வாய்க்கிழமை மாலை, மீண்டும் மதுரை செல்வதற்காக புறப்பட்டுள்ளனர். 
அந்த கார் திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அடுத்துள்ள கிரியம்பட்டி அருகே 4 வழிச்சாலையில் வந்து கொண்டிருந்தபோது, திடீரென காரில் தீப்பற்றி விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து, காரை ஓரமாக நிறுத்திவிட்டு விஜயகுமார் உள்ளிட்ட 4 பேரும் துரிதமாக வெளியேறியுள்ளனர். 
அதே நேரத்தில் தீ மேலும் பரவி, கார் முழுவதும் சேதமடைந்தது. விஜயகுமார் உள்ளிட்ட 4 பேரும் காயமின்றி உயிர் தப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த வேடசந்தூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயணைப்பு பணியில் ஈடுபட்டனர். வேடசந்தூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT