திண்டுக்கல்

2 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் வெண்கலம்:  நத்தம் பள்ளி மாணவருக்கு பாராட்டு

4th Sep 2019 07:23 AM

ADVERTISEMENT

மாநில அளவிலான ஜூனியர் தடகளப் போட்டியில் 2ஆயிரம் மீட்டர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற நத்தம் பகுதியைச் சேர்ந்த மாணவருக்கு செவ்வாய்க்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. 
 மாநில அளவிலான 34 ஆவது ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி, சென்னை நேரு விளையாட்டு அரங்கில் கடந்த 29 முதல் 31ஆம் தேதி வரையில் நடைபெற்றது. இதில் ஆகஸ்ட் 30 ஆம் தேதி நடைபெற்ற 16 வயதுக்குள்பட்டோருக்கான 2 ஆயிரம் மீட்டர் ஓட்டப் போட்டியில், நத்தம் அடுத்துள்ள பரளி புதூர் பகுதியைச் சேர்ந்த அழகுமணி என்பவரது மகன் அசோக்குமார் (16) கலந்து கொண்டார். 
நத்தம் பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு பயின்று வரும் இவர், இப்போட்டியில் 3 ஆம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார். 
நத்தம் கோவில்பட்டி ஞானம் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் பங்கேற்ற மாணவர் அசோக்குமாருக்கு, ஸ்போர்ட்ஸ் கிளப் ஒருங்கிணைப்பாளர்கள் திருக்குமரன், சசிகுமார் மற்றும் பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை பாராட்டுத் தெரிவித்தனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT