திண்டுக்கல்

வடமதுரை அருகே தந்தையை தாக்கிய 2 மகன்கள் கைது

4th Sep 2019 07:24 AM

ADVERTISEMENT

வடமதுரை அருகே தந்தையை தாக்கிய மகன்கள் இருவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அடுத்துள்ள மோர்பட்டியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (45). மாட்டு வியாபாரியான இவருக்கு ராஜேஷ் கண்ணன்(25), தினேஷ் கண்ணன்(23) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் காதல் திருமணம் 
செய்து கொண்டனர். இதில் மது அருந்தும் பழக்கம் கொண்ட ராஜேஷ் கண்ணன், மனைவி பிரியாவிடம் அடிக்கடி தகராறு 
செய்து வந்துள்ளார். அதேபோல் திங்கள்கிழமையும் பிரியாவுடன் ராஜேஷ் கண்ணன் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால், ராஜேஷ் கண்ணனை செந்தில்குமார் கண்டித்துள்ளார். அப்போது ஆத்திரமடைந்த ராஜேஷ்கண்ணன் மற்றும் தினேஷ் கண்ணன் ஆகிய இருவரும், செந்தில்குமாரை தாக்கியுள்ளனர். இதுகுறித்து செந்தில்குமார், வடமதுரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 
இதனிடையே ராஜேஷ் கண்ணன் தாக்கியதில் காயமடைந்த அவரது மனைவி பிரியா, சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். செந்தில்குமார் அளித்தப் புகாரின் பேரில் ராஜேஷ் கண்ணன் மற்றும் தினேஷ் கண்ணன் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT