திண்டுக்கல்

பாலசமுத்திரம் பெருமாள் கோயிலில் செப்.8 இல் ஆவணி பிரம்மோற்சவம்

4th Sep 2019 07:21 AM

ADVERTISEMENT

பழனியை அடுத்த பாலசமுத்திரம் அகோபில வரதராஜப் பெருமாள் கோயிலில் வரும் செப்டம்பர் 8 ஆம் தேதி ஆவணி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உபகோயில்களுள் ஒன்றான இக்கோயிலில் காலை 7.30 மணிக்கு மேல் கொடியேற்றம் நடைபெறுகிறது. 
தொடர்ந்து 11 நாள்களும் தினமும் சுவாமி பவளக்கால் சப்பரம், அனுமார், கருடன், அன்னம், குதிரை, சேஷ வாகனங்களில் வீதி உலா வருவார். செப்டம்பர் 14 ஆம் தேதி மாலை 6.45 மணிக்கு மேல் திருக்கல்யாணமும்,  15 ஆம் தேதி பாரிவேட்டையும், 16 ஆம் தேதி காலை 9 மணிக்கு மேல் திருத்தேர் வடம்பிடித்தலும் நடைபெற உள்ளன. 18 ஆம் தேதி விடையாற்றி உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.  விழா நாள்களில் தினமும் மாலையில் கோயில் வளாகத்தில் ஆன்மிக சொற்பொழிவு, பட்டிமன்றம், பரதநாட்டியம், பாசுரங்கள் சேவித்தல் உள்ளிட்ட பல கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்.  
விழா ஏற்பாடுகளை பழனி கோயில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் 
(பொறுப்பு) செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள், அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT