திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டத்தில் 11 பேருக்கு நல்லாசிரியர் விருது

4th Sep 2019 07:23 AM

ADVERTISEMENT

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 11 ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 
விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களின் பட்டியலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சே.மணிவண்ணன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டார். அதில் இடம் பெற்றுள்ள தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் விவரம்:
அம்மையநாயக்கனூர் அரசு மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் இரா.ராசேந்திரன், மணக்காட்டூர் அரசு உயர் நிலைப் பள்ளி தலைமையாசிரியை இரா.லட்சுமி, கோ.ராமநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் பெ.முனியப்பன், திண்டுக்கல் எம்எஸ்பி. அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் ச.ஜெயராமன், திண்டுக்கல் சௌராஷ்ட்ரா ஸ்ரீவரதராஜா உயர்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் யசோதா நாகராஜன், வத்தலகுண்டு அடுத்துள்ள ந.புதுப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் வே.பாலாமணி, வேடசந்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் லெ.பாண்டிச்செல்வி, திண்டுக்கல் காந்திஜி நினைவு நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியை ஆ.லதா மகேஷ்வரி, நிலக்கோட்டை அடுத்துள்ள அம்மாபட்டி ஆர்சி. நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் ஆர்.பீட்டர், வேடசந்தூர் அடுத்துள்ள பூத்தாம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியர் பா.நளினி, பழனி பாரத் வித்யாபவன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் நிர்மலா ஆகியோர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT