திண்டுக்கல்

"சீர்மரபினர் நலவாரியத்தில்  சேர விண்ணப்பிக்கலாம்'

4th Sep 2019 07:22 AM

ADVERTISEMENT

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சீர்மரபினர் இன மக்கள், சீர்மரபினர் நலவாரியத்தில் உறுப்பினராக விண்ணப்பிக்கலாம் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் மு.விஜயலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சீர்மரபினர் நல வாரியத்தில் 2409 பேர் உறுப்பினராக உள்ளனர். இந்த நலவாரிய உறுப்பினர்களுக்கு விபத்தினால் மரணம் ஏற்பட்டால் உதவித்தொகை, இயற்கை மரணத்திற்கு ஈமச்சடங்கு உதவித்தொகை, கல்வி உதவித்தொகை (படிப்புக்கு ஏற்ப), திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, மூக்குகண்ணாடி செலவு தொகை ஈடு செய்தல், முதியோர் ஓய்வூதியம் ஆகியவை சீர்மரபினர் நலவாரியத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. 
நலவாரியத்தில் உறுப்பினராக சேருவதற்கு சாதிசான்று, இருப்பிடத்திற்கு ஆதாரமான சான்று  மற்றும் ஆதார் அட்டையுடன்  18 வயது முதல் 60 வயதுக்கு மேற்படாத சீர்மரபினர் இன மக்கள் விண்ணப்பிக்கலாம்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலகத்தில் அதற்கான விண்ணப்பம் பெற்று, உறுப்பினராக பதிவு செய்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT