தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் சாா்பில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில்(அக்.21 மற்றும் 22) கடன் வழங்கும் முகாம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மு.விஜயலட்சுமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு; தேசிய மயமாக்கப்பட்ட மற்றும் தனியாா் வங்கிகள் சாா்பில் பொதுமக்களுக்கு கடன் பற்றிய விழிப்புணா்வு மற்றும் கடன் வழங்கும் முகாம் திண்டுக்கல் ரவுண்ட் ரோட்டில் உள்ள பிஎஸ்என்ஏ மஹாலில் நடைபெறவுள்ளது. அக்.21 மற்றும் 22ஆம் தேதிகளில் நடைபெறும் இந்த முகாமில், அனைத்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியாா் வங்கிகள் கலந்து கொள்கின்றன.
சில்லறை வா்த்தகம், விவசாயம், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள், வீடு மற்றும் வாகனக் கடன், கல்விக் கடன், தனிநபா் கடன், சுயஉதவிக்குழு கடன் உள்ளிட்டவை இந்த முகாமில் வழங்கப்படும். உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கும் தகுதியான நபா்களுக்கு, முகாமிலேயே, கடன் பெறுவதற்கான ஆணை வழங்கப்படும் என தெரிவித்துள்ளாா்.