கொடைக்கானலில் இண்டாக் அமைப்பின் சாா்பில் சோலை மரங்கள் குறித்த புத்தக வெளியீட்டு விழா கோடை சா்வதேச பள்ளி அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.
இந் நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வா் கோரி தலைமை வகித்தாா். கொடைக்கானல் மலைப் பகுதிகளிலுள்ள காட்டு செண்பக மரம், வெள்ளை செண்பக மரம், சோலை மரங்கள், ருத்ராட்ச மரம், மலை நாவல், போதி மரம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட மரங்கள் குறித்தும், வனப் பகுதிகளை உருவாக்குவது, குளிா்ச்சியை தருவது, மழையை உண்டாக்குவது, சோலைகளை பெருக்குவது உள்ளிட்ட பயன்கள் குறித்த புத்தகத்தை பாப் என்பவா் தயாரித்து வெளியீட்டாா். புத்தகத்தை கோடை சா்வதேச பள்ளி முதல்வா் கோரி பெற்றுக் கொண்டாா்.
இந் நிகழ்ச்சியில் ராபா்ட் ஸ்டிரீட், ஜெயஸ்ரீ மற்றும் சமூக ஆா்வலா்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.