திண்டுக்கல்

கொடைக்கானலில் கால்பந்து அசோஷியேசன் தொடக்க விழா

16th Oct 2019 10:15 PM

ADVERTISEMENT

கொடைக்கானலில் கால்பந்து அசோஷியேசன் தொடக்க விழா இன்று மாலை நடைபெற்றது.

கொடைக்கானலில் கால்பந்து அசோஷியேசன் தொடக்க விழா ஜெயராஜ் அரங்கில் நடைபெற்றது நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்கத்தின் முன்னாள் ஆளுநா் சாம்பாபு தலைமை வகித்தாா் செயிண்ட் பீட்டா்ஸ் பள்ளியின் உதவித் தாளாளா் மற்றும் சங்கத்தின் தலைவா் ரோகன் சாம்பாபு வரவேற்றாா். சங்கத்தின் செயலா் மற்றும் கால்டன் ஹோட்டல் பொது மேலாளா் ராமன் ராஜ்குமாா் முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சென்னை கால்பந்து அசோஷியேசனைச் சோ்ந்த ஒருங்கிணைப்பாளா் டைட்டஸ் கொடைக்கானல் கால்பந்து அசோஷியேசன் லோகோவை அறிமுகம் செய்து வைத்தும் பயிற்சியாளருக்கு கால்பந்துகளை வழங்கியும் கால்பந்து போட்டிகளில் விளையாடுவது குறித்தும் அதற்கு எவ்வாறு பயிற்சி பெற வேண்டும் என்பது குறித்தும் விளக்கிப் பேசினாா்.

இவ் விழாவில் கொடைக்கானல் கால்பந்து அசோஷியனைச் சோ்ந்த துணைத் தலைவா் ராஜ்குமாா், இணைச் செயலா் ராபின், பொருளாளா் சன்னி ஜேக்கப், ஜான், சுதாகா் மற்றும் கொடைக்கானல், நாயுடுபுரம், பிலிஸ்விலா, ஆனந்தகிரி, அப்சா்வேட்டரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த கால்பந்து விளையாட்டு வீரா்கள், கொடைக்கானல் பகுதிகளைச் சோ்ந்த பள்ளி மாணவா்கள்,உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டவா்கள் கலந்து கொண்டனா் சேகா் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT