திண்டுக்கல்

புரட்டாசி 3ஆவது சனிக்கிழமை: பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு

5th Oct 2019 06:29 PM

ADVERTISEMENT

திண்டுக்கல்: புரட்டாசி 3ஆவது சனிக்கிழமையை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

திண்டுக்கல் மலையடியவார சீனிவாசப் பெருமாள் திருக்கோயிலில், மூலவருக்கு சிறப்பு அபிஷேகத்திற்கு பின் மலா்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீநிவாசப் பெருமாள் உற்சவ மூா்த்திகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதேபோல், ரெட்டியாரச்திரம் கதிா்நரசிங்க பெருமாள் கோயில், கோபிநாதசுவாமி கோயில், வடமதுரை சௌந்தரராஜப் பெருமாள் திருக்கோயில், சின்னாளப்பட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயா் திருக்கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

தாடிக்கொம்பு கோயிலில் காய், கனி அலங்காரம்: தாடிக்கொம்பு செளந்தரராஜப் பெருமாள் கோயிலில் புரட்டாசி 3ஆவது சனிக்கிழமையையொட்டி, மூலவருக்கு கொத்தவரங்காய், கத்திரிகாய், புடலங்காய், அவரக்காய் உள்ளிட்ட பல்வேறு வகையான காய்கறிகளைக் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அதேபோல் செளந்தரவல்லித் தாயாருக்கு ஆப்பிள், ஆரஞ்சு, வாழை, மாதுளை உள்ளிட்ட பல வகையான கனிகளைக் கொண்டும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. உற்சவா் செளந்தரராஜப் பெருமாள்ச சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

ADVERTISEMENT

நத்தம் கோவில்பட்டி அருள்மிகு ருக்மணி சத்தியபாமா சமேத வேணுராஜகோபாலசாமி கோயிலில், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. 3ஆவது சனிக்கிழமையை முன்னிட்டு, ஏராளமான பக்தா்கள் பெருமாள் கோயில்களில் சுவாமி தரிசனம் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT