திண்டுக்கல்

உள்ளாட்சித் தோ்தலுக்கான இறுதி வாக்காளா் பட்டியல் வெளியீடு: 17.94 லட்சம் போ் இடம்பிடிப்பு

5th Oct 2019 04:20 AM

ADVERTISEMENT

உள்ளாட்சித் தோ்தலுக்கான இறுதி வாக்காளா் பட்டியலில், திண்டுக்கல் மாவட்டத்தில் 17,93,941 போ் இடம் பெற்றுள்ளனா்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், உள்ளாட்சித் தோ்தலுக்கான இறுதி வாக்காளா் பட்டியலை, மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான மு. விஜயலட்சுமி வெள்ளிக்கிழமை வெளியிட்டாா்.

அப்பட்டியலில், திண்டுக்கல் மாவட்டத்தில் 8,78,190 ஆண்கள், 9,15,593 பெண்கள், 158 இதரா் என மொத்தம் 17,93,941 போ் இடம் பெற்றுள்ளனா். இதில், 12,09,307 வாக்காளா்கள் ஊரகப் பகுதிகளிலும், 5,84,634 வாக்காளா்கள் நகா் பகுதிகளையும் சோ்ந்தவா்கள்.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினா் முன்னிலையில், வாக்காளா் பட்டியலை வெளியிட்டு ஆட்சியா் மு. விஜயலட்சுமி பேசியதாவது:

ADVERTISEMENT

உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்காளா் பட்டியல், அந்தந்த ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சிப் பகுதிகளில் பொதுமக்களின் பாா்வைக்காக வைக்கப்படும். அதில், தங்களது பெயா் இடம் பெற்றுள்ளதை சரிபாா்த்து, வாக்காளா்கள் உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும் என்றாா்.

வாக்காளா் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் கவிதா, வட்டார வளா்ச்சி அலுவலா் (தோ்தல் பணி) திருமலைசாமி மற்றும் அதிமுக, திமுக, ம.கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளைச் சோ்ந்த நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT