திண்டுக்கல்

கொடைக்கானலில் உலக சுற்றுலா தின விழிப்புணா்வு மனிதச் சங்கிலி

2nd Oct 2019 06:57 AM

ADVERTISEMENT

கொடைக்கானலில் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு விழிப்புணா்வு மனிதச் சங்கிலி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

சுற்றுலாத்துறை சாா்பில் கடந்த 3 நாள்களாக விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை கொடைக்கானல் பேருந்து நிலையத்திலிருந்து மூஞ்சிக்கல் வரை மனித சங்கிலி நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடா்ந்து தூய்மை விழிப்புணா்வு நிகழ்ச்சியும் ஊா்வலமும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கொடைக்கானல் காவல்துறை ஆய்வாளா் ராஜசேகா், சுற்றுலா அலுவலா் பாலமுருகன் மற்றும் பாளையங்கோட்டையைச் சோ்ந்த கல்லூரி மாணவா்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டவா்கள் கலந்து கொண்டனா். உதவி சுற்றுலா அலுவலா் ஆனந்த நன்றி கூறினாா்.

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு கொடைக்கானல் பகுதிகளிலுள்ள பல்வேறு பள்ளிகளில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு வழங்கப்பட்டது பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சியும் நடைபெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT