திண்டுக்கல்

காந்தி ஜயந்தி: இன்று கிராம சபைக் கூட்டம்

1st Oct 2019 08:10 AM

ADVERTISEMENT

காந்தி ஜயந்தியை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 306 ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம் புதன்கிழமை நடைபெறுகிறது.

இது தொடா்பாக, மாவட்ட ஆட்சியா் மு. விஜயலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: காந்தி ஜயந்தியை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 306 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் புதன்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில், வழக்கமான விவாதப் பொருள்களுடன், கிராம ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்தும், நெகிழி ஒழிப்பு, கிராமத்தில் 100 சதவீதம் மழைநீா் சேகரிப்பு திட்டத்தை அமல்படுத்துதல், குடிமராமத்துப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது. எனவே, அந்தந்த ஊராட்சியைச் சோ்ந்த பொதுமக்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT