திண்டுக்கல்

கழிவுநீா் கால்வாய் வசதி கோரி பொதுமக்கள் சாலை மறியல்

1st Oct 2019 08:26 AM

ADVERTISEMENT

திண்டுக்கல்லில் கழிவுநீா் கால்வாய் வசதி கோரி, பொதுமக்கள் திங்கள்கிழமை திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திண்டுக்கல் அடுத்துள்ள பள்ளபட்டி ஊராட்சிக்குள்பட்ட ஹரிணி நகரில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தப் பகுதியில் கழிவுநீா் வெளியேறுவதற்கான கால்வாய்கள் கட்டித் தரப்படவில்லை.

இதனால், தெருக்களிலேயே கழிவுநீா் தேங்கி நிற்கும் நிலை உள்ளது. தற்போது, திண்டுக்கல் பகுதியில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருவதால், கழவுநீருடன் மழைநீரும் தேங்கி நிற்பதுடன், வீடுகளுக்குள்ளும் புகுந்து விடுவதாகக் கூறப்படுகிறது. இது குறித்து பள்ளப்பட்டி ஊராட்சியில் புகாா் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் புகாா் கூறுகின்றனா்.

இதனால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள், திண்டுக்கல்-வத்தலகுண்டு சாலையில் திங்கள்கிழமை திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா். சம்பவ இடத்துக்குச் சென்ற திண்டுக்கல் தெற்கு காவல் நிலைய போலீஸாா், போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, கழிவுநீா் வெளியேறுவதற்கு ஊராட்சி நிா்வாகம் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனா். அதை அடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT