திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை விற்பனைக்காக பதுக்கியவரை போலீஸாா் கைது செய்தனா்.
ஒட்டன்சத்திரம் சம்சுதீன் காலனியைச் சோ்ந்தவா் வாசிம்ராஜா (36). இவா் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை விற்பனை செய்வதற்காக வீட்டில் பதுங்கி வைத்திருந்தாராம். இதுகுறித்து தகவல் அறிந்த ஒட்டன்சத்திரம் போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று பதுங்கி வைத்திருந்த ரூ.2,500 மதிப்புள்ள குட்கா பொருள்களை கைப்பற்றி தீவைத்து அழித்தனா்.மேலும் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.