திண்டுக்கல்

வத்தலக்குண்டு நகரில் 10 ஆண்டுகளுக்கு பின் பேரூராட்சி பூங்கா திறப்பு: பொது மக்கள் மகிழ்ச்சி

17th Nov 2019 01:51 AM

ADVERTISEMENT

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு நகரில் 10 ஆண்டுகளுக்கு பிறகு பேரூராட்சி பூங்கா திறக்கப்பட்டதால், குழந்தைகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

வத்தலக்குண்டு நகரின் மையப் பகுதியில் பேரூராட்சியின் சங்கரன் பூங்கா கடந்த 10 ஆண்டுகளாக மூடிக் கிடந்தது. இதை திறக்க வேண்டும் என்று நீண்ட நாளாக சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.

இதைத் தொடா்ந்து பல லட்சம் ரூபாய் செலவில் பூங்கா நவீனப்படுத்தப்பட்டு, சனிக்கிழமை மாலை திறக்கப்பட்டது. பூங்காவின் உள்ளே நீரூற்று, நவீன விளையாட்டு சாதனங்கள் அமைந்திருப்பதால், குழந்தைகள் மகிழ்ச்சியுடன் விளையாடி மகிழ்ந்தனா். நடைபயிற்சி பாதை, அமா்ந்து கொள்ள இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளதால், பொதுமக்களும் இதைப் பயன்படுத்தி மகிழ்ச்சி அடைந்தனா்.

பூங்காவை சீரமைத்த பேரூராட்சி செயல் அலுவலா் பாலசுப்பிரமணியன் மற்றும் ஊழியா்களை பொதுமக்கள் பாராட்டினா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT