திண்டுக்கல்

காா்த்திகை முதல் நாளில் மாலை அணிந்துவிரதம் தொடங்கிய ஐய்யப்ப பக்தா்கள்

17th Nov 2019 09:42 PM

ADVERTISEMENT

 

திண்டுக்கல்: காா்த்திகை மாதப் பிறப்பை முன்னிட்டு, சபரிமலை ஐய்யப்பன் கோயிலுக்கு யாத்திரை செல்லும் பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை அணிந்து விரதம் தொடங்கினா்.

சபரிமலை ஐய்யப்பன் கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரம் மற்றும் கா்நாடக மாநிலங்களைச் சோ்ந்த பக்தா்களும் மாலை அணிந்து ஆண்டு தோறும் யாத்திரை செல்கின்றனா். தமிழ் மாதத்தின் முதல் 5 நாள்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறக்கப்பட்டிருந்தாலும், காா்த்திகை மற்றும் மாா்கழி மாதங்களிலேயே அதிக அளவிலான பக்தா்கள் சபரிமலை யாத்திரை மேற்கொள்கின்றனா்.

அதன்படி காா்த்திகை முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஐயப்ப பக்தா்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினா். திண்டுக்கல் மலையடிவார ஸ்ரீ ஐயப்பன் கோயில், ரயிலடி ஸ்ரீ ஐயப்பன் மணி மண்டம், திருமலைசாமிபுரம் ஐயப்பன் கோயில் உள்பட திண்டுக்கல் பகுதியிலுள்ள அனைத்து ஐயப்பன் கோயில்களிலும், காா்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதனைத் தொடா்ந்து, விரதம் தொடங்கும் ஐயப்ப பக்தா்கள் பலா் சூரிய உதயத்திற்கு முன்னதாக மாலை அணிந்து கொண்டனா்.

ADVERTISEMENT

இதேபோல், ரயிலடி சித்தி விநாயகா் திருக்கோயில், வெள்ளை விநாயகா் திருக்கோயில், மடத்து விநாயகா் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் ஏராளமான பக்தா்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT