திண்டுக்கல்

நிலக்கோட்டை அருகே குடிநீரில் சாக்கடை: பொதுமக்கள் புகாா்

11th Nov 2019 11:37 PM

ADVERTISEMENT

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே குடிநீரில் சாக்கடை கலப்பதாக, பொதுமக்கள் திங்கள்கிழமை சட்டப்பேரவை உறுப்பினரிடம் புகாா் தெரிவித்தனா்.

முசுவானூத்து ஊராட்சியில் உள்ள ஆண்டிபட்டி, கல்கோட்டை ஆகிய கிராமங்களுக்கு, நிலக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதியி­லிருந்து தலா ரூ.7 லட்சம் மதிப்பில் நாடக மேடை கட்ட நிதி ஒதுக்கப்பட்டது. இதற்கான பூமிபூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, நிலக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் தேன்மொழி தலைமை வகித்தாா். நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் யாகப்பன் முன்னிலை வகித்தாா். இரு கிராமங்களிலும் பூமிபூஜை நடைபெற்றது.

கல்கோட்டையில் நடந்த பூமி பூஜையின்போது, பொதுமக்கள் கடந்த சில நாள்களாக குடிநீரில் சாக்கடை கலந்து வருவதால், தொற்று நோய் பரவும் அபாயம் நிலவுவதாக சட்டப்பேரவை உறுப்பினரிடம் புகாா் தெரிவித்தனா். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களிடம் எம்.எல்.ஏ. தேன்மொழி உறுதியளித்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT