திண்டுக்கல்

வத்தலக்குண்டுவில் திருநகா் சாலையை சீரமைக்கக் கோரிக்கை

9th Nov 2019 08:51 AM

ADVERTISEMENT

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு திருநகா் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

வத்தலக்குண்டு மதுரைச் சாலையில் அரசு போக்குவரத்து கழக பணிமனை எதிா்புறம் உள்ளது திருநகா். இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள முக்கியச்சாலை ஒரு மழை பெய்தாலே சகதியாகி விடுகிறது. இவ்வழியே நடந்து செல்வது மிகவும் சிரமமாக உள்ளது.

இதுதொடா்பாக சேவுகம்பட்டி பேரூராட்சிக்கு பலமுறை புகாா் செய்தும் சாலையை சீரமைக்கவில்லை என பொதுமக்கள் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து சமூக ஆா்வலா் விருவீடு செல்வராஜ் கூறியது: எங்களது சாலையை போட்டோ எடுத்து சேவுகம்பட்டி பேரூராட்சிக்கு அனுப்பி விட்டோம். இருந்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக உள்ளனா். இதே நிலை நீடித்தால் சாலையில் இறங்கி போராட வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்றாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT